அமைதிப்புறா சுடுவதற்கு அல்ல பறப்பதற்கு, அமைதியை பறப்புவதற்கு
சுமை கூட சுகம் தான்,
சுகமாய் சுமக்கும் போது;
சினம் கூட மணம் தான்,
சிரிப்பால் ம(ய)ணக்கும்போது;
சினமும் சிதறும் தான்
சிரித்து மகிழும் போது.
ரனம் கூட ரசனைதான்,
ரசித்து வலியை ஏற்கும்போது;
கண்ணீரும் கரிப்பதில்லை,
கருணை மழை பொழியும்போது.
சோகமும் சுவை தான்,
சோகத்தில் சொந்தம் கூடும்போது;
கோபமும் குதூகலம் தான்,
கோபப்படாது ஏற்கும்போது;
விரக்தியிலும் விடுவு உண்டு,
முடிவு இவ்வளவுதான் என்று எண்ணி விடுபடமுயலும் போது;
தவறுகள் செய்தவனும் மனிதனாகலாம் தன்னை திருத்திக் கொள்ளும் போது;
சீற்றமும் சிறிதாகும்,
சிந்திக்கத் துவங்கும் போது;
ஆத்திரமும் அடங்கிவிடும்,
அன்பு சுரக்கும் போது;
விரோதமும் விலகிவிடும்,
விரும்பி பழகும் போது;
குரோதமும் குறைந்துவிடும்,
குணத்தோடு பழகும் போது;
அகங்காரம் அடங்கிபோய்விடும்,
அன்பைத் தேடும் போது;
ஆவேசமும் ஆரிப்போகும்,
ஆத்மா அமைதி காணும் போது;
ஆத்திரமும் அடியோடு போய்விடும்,
அமைதியாய் உண்மையை அறியும் போது;
இம்சையும் இனிமையாகும்,
அகிம்சையை கடைபிடிக்கும் போது;
வக்கரமும் வடிந்துவிடும்,
வாழ்வியலில் நெறியைக்
கடைபிடிக்கும்போது.
ஆத்திரம் அடியோடு போய்விடும் ஆறுதலாய் பேசும் போது;
ஆணவமும் அடங்கிப்போகும்
ஆறியாமை இருளை நீக்கம் போது;
பகையும் பறந்தோடும்,
பாசமழைபொழியும் போது;
மன உளைச்சலும் மாறிப்போகும்,
மகிழ்சி காணும் பொது.
சளிப்பம் களிப்பாகும்;
கலகலவென்று பழகும் போது;
சீண்டுதலும் உந்துதலாகும்,
உண்மையை உணரும் போது.
சுழிப்பில் தெரியும் வேகம்
சுளிப்பால் தெரியும் சோகம்
துயரத்தின் உயரமே துன்பம்,
துன்பமும் இன்பம்தான்,
தூக்கிப்போட பழகும்போது;
துடிப்பும் தவிப்பும் பழசுதான்,
இறுக்கமான மனநிலையை மாற்றும் போது;
வெறுப்பும் விருப்பமாகும்.
விரும்பத்துவங்கும் போது.
துக்கமும் தூசியாய் பறக்கும்,
தூங்கி எழும் போது.
அச்சமும் துச்சமாகும்,
அசைத்துப்பார்க்கும் போது;
பயமும் பாகாய் உருகும்,
பக்குவப்படும்போது;
ஏமாற்றமும் ஏளனம் செய்யும்,
எட்டி ஒதுங்கும் போது;
பொறாமையும் பொடியாய் போகும்,
பொருத்து செயல்படும் போது;
எதிர்பார்ப்பும் ஏக்கம்தான்,
எமாறும் போது;
பற்றின்மையும் பறந்துபோகும்,
பாசம் சுரக்கும் போது;
இழப்பையும் ஈடுபடுத்தலாம்,
இதயச் சுமையை இறக்கும் போது;
கவலையும் கடந்து போகும்,
கண்ணீர் விட்டு அழுது முடிக்கும் போது;
கெடுதலும் விடுதல்தான்,
கெட்டவனை ஒதுக்கும் போது;
தாழ்வு பனிவல்ல;
தாழ்வு என்பது தலை குணிவு;
தாழ்ச்சியும் வீழ்சிதான்;
தாழ்வை வீழ்த்தலாம், தவறென்று அறியும் போது;
கிலி பிடித்தவன் பேடி ஆவான்,
கிள்ளிப்பார்ப்பவன், சொல்லிவரமாட்டான்
பேடி என்றும் பாடி வருவான்;
ஆவோசம் அடங்கிவிடும்;
ஆத்திரம் அடியோடு மறையும்போது.
தீங்கு செய்பவன் தீயவன் ஆகின்றான்
திருந்தியவன் தெய்வமாகின்றான்;
எதுவும் சாத்தியம் தான்;
எடுத்த காரியத்தை சிறப்பாய் முடிக்கும் போது;
மட்டமான செயல்கள் உன்னை சரிக்கும்;
உயர்வான எண்ணங்கள் உயர்த்தும்,
தாழ்வான, தலை குணிவான செயல்கள் உன்னை எரிக்கும்;
புலம்பல் புழுவாய் துடிக்க வைக்கும்,
புகல் உன்னை உச்சியிலிருந்து தள்ளப் பார்க்கும்;
பகட்டு வாழ்க்கை பரிதாபமாய் முடியும்.
தோல்வி தொட்டாலும் தொல்லை என்று எண்ணாதே;
தோல்வியை தொடந்து போராடு வெற்றி ;
தோல்வியை தொடரவிடாது உழை; ஜெயம் உனக்கு;
கேலி கிண்டலையும் கிழித்து போட்டு,
கிடு கிடு என்று வீர நடை போடு;
வெரும் பயலுக்கே வெறி வரும்போது,
வெற்றியாளனுக்கு வெல்வோம் என்ற வெறி வேண்டும்;
வேதனையை துடைக்க கண்ணீர் வேண்டாம்;
இதயத்தில் கிடக்கும் சோகத்தை அகற்று;
விடியட்டும் பொழுதும் விழுந்தே படரட்டும் மனித நேயம்;
தொடரட்டும் அன்பு, பாசம், பரிவு, பனிவு, கனிவு, அரவணைப்பு இரக்கமும்.
அமைதிப்புறா சுடுவதற்கு அல்ல பறப்பதற்கு, அமைதியை பறப்புவதற்கு