அயல்நாட்டுப் படிப்பு

அயல்நாட்டுப் படிப்பு !
*************

போர்மேகம் எங்களின் கனவுகள் மறைத்திடும் !
யார்வென்ற போதிலும் இலக்குகள் வென்றிடும் !

இளமையின் நினைவெலாம் அயலக வாழ்க்கையே !
வளமெலாம் இழந்துதான் வாங்கினோம் பட்டமே !

கடலினைத் தாண்டிடும் தருணமும் கனிந்திட /
இடையிலே போரினால் தொற்றினால் தடைகளே !

இடர்களும் தடைகளும் எதிர்வந்த போதிலும் /
தொடர்நதிடும் எம்பணி தாயக மண்ணிலே !

அடிமையாய் அயல்நாட்டில் அலைவதைப் பார்க்கிலும் /
துடிப்பொடு தாயகம் உயர்ந்திட உழைப்பொமே !

-யாதுமறியான்.

எழுதியவர் : (13-Mar-22, 7:47 am)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 41

மேலே