முதல் காதலிக்கு முதல் முத்தம்
முதல் முத்தம் !
------''''
பதின்பருவக் காதலிக்கு
பதற்றமாய்த் தந்த
எனது
முதல் முத்தம் !
அவளது
செவ்விதழ்களைத்
தீண்டவே இல்லை !
புயலிலோ தென்றலிலோ
கரைந்து போகாது காற்றடிக்கும் திசையெல்லாம்
கண்முன் மிதக்கிறது !
இடி ஓசைக்கு அப்பாலும்
இச்-என
மெலிதாக இசைக்கிறது !
உதடுகளில் மோதும் எவையும்
அவளின் இதழ்களாகவே இனிக்கின்றன !
பார்வையில் தென்படாத போதிலும்
விழித்திரையில்
அவளின் இதழ்களே
விசுவரூபம் எடுத்து வியாபித்திருக்கின்றன !
கடந்த நூற்றாண்டில் இட்ட
காதலின் முதல் முத்தம்
இந்த நூற்றாண்டிலும்
இடைப்பட்டு இம்சிக்கிறது;
அடுத்த நூற்றாண்டிற்கும் அதுவே கடத்தப்படுமோ !
உற்றுப்பார்த்தால்தான் புரிகிறது
முதல் முத்தம் மட்டுமல்ல
முற்றுப்பெறாத முத்தங்கள் யாவுமே
தாயில்லாப் பிள்ளைகளாய்க்
காதலியின் முகம் தேடிக்
காற்றில் அலைகின்றன!
-யாதுமறியான் .