கந்தல் ஆடை அல்ல காந்த ஆடை
காந்த ஆடையில்
காய்ந்தாடும் வேளையில்
கயல்விழி உன்
முகம் பார்க்க ஏங்குதடி
என் கருவிழிகள் இரண்டும்
காணுகின்ற பொழுது எல்லாம்
காந்த ஆடை கொண்டு உன் விழி
என்னை சூழ்ந்து கொண்டு
உயிருக்குள் ஊஞ்சலாடுதடி
கந்தல் ஆடையா அல்ல காந்த ஆடையா
உன் பார்வை என்று
என்னுள் குழப்பம் செய்யுதடி