பேரின்பம்

பெண்ணின் அழகில் மயங்கி என்னை
மறந்தேன் எல்லாம் மறந்தேன் அவளே
வாழ்வு என்று எண்ணி; யவ்வனம் போனது
மூப்பும் வந்தது கூடவே நோய்களும்
அப்போதும் மோகம் போகவில்லை முற்றிலும்
யாரோ சொன்னது இப்போது நினைவில்வந்தது
என்நாவில் இறைவன் நாமம் வந்தடைந்தது
உள்ளத்திலும் அவன் எண்ணம் மெல்ல
அலைப்பாய மோகமும் மெல்ல மறைந்தது
சோகம் தீர அவன் பாதம் தெரிந்திட
பற்றினேன் பற்றற்றான் பாதம் மனதில்
புதிய ஆன்மீக எண்ணங்களும் அலைமோத
மோகமும் காமமும் முழுவதும் வற்றிட
தெய்வீகம் சுரந்தது பேரின்ப சுனையாய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (13-Mar-22, 12:41 pm)
Tanglish : perinbam
பார்வை : 69

மேலே