இனிப்பு கடையில் திணிப்பு
1. வாங்க வந்தவர்: ஐயா இது என்னங்க?
கடைக்காரர்: பால் கோவா
வந்தவர்: பால் குஜராத் கிடைக்குமா?
கடைக்காரர்:???
2. வந்தவர்:மைசூர் பாகுக்கும் மைசூர் பாவிற்கும் என்ன வித்தியாசம்?
கடைக்காரர்: மரியாதையோடு செய்தால் மைசூர் பாகு. மரியாதை குறைவாக செய்தால் மைசூர் பா.
வந்தவர்: அடேங்கப்.....பா
3. வந்தவர்: அல்வா இருக்கா?
கடைக்காரர்: திருநெல்வேலி அல்வா, பாம்பே அல்வா, பாதாம் அல்வா, டிரை புரூட்ஸ் அல்வா, எது வேண்டும்?
வந்தவர்: எதுவுமே வேண்டாம்.
4. வந்தவர்: இந்த ஜாங்கிரி பார்த்தா ரொம்ப ப்ரெஷ்ஷா இருக்கே, எப்போ போட்டது?
கடைக்காரர்: ஜஹாங்கிர் மன்னன் ஆட்சி செய்த போது போட்டது.
5. வந்தவர்: ரவா லட்டு எதை எல்லாம் போட்டு பண்ணுகிறீர்கள்?
கடைக்காரர்: பணத்தை போட்டுத் தான்..
6. வந்தவர்: இந்த ஸ்பெஷல் முந்திரி கேக் எப்படி கிலோ?
கடைக்காரர்; கிலோ 3000 ரூபாய்
வந்தவர்: இந்த விலையில் எனக்கு ஒரு முந்திரி தோட்டமே கிடைக்கும்.
கடைக்காரர்:????
7. வந்தவர்; இந்த குலாப் ஜாமூன் ரொம்ப கருப்பா இருக்கிறதே?
கடைக்காரர்: கொஞ்சம் பேர்&லவ்லி கிரீம் தடவுங்க. நல்ல வெளுப்பாயிடும்.
வந்தவர்:???
8. வந்தவர்: காரட் அல்வா கிலோ எவ்வளவு விலை?
கடைக்காரர்: 22 காரட்டா, 24 காரட்டா?
வந்தவர்; புரியவில்லையே
கடைக்காரர்: 22 காரட்டுகளை திருவி போட்டு கிளறியது 22 காரட் அல்வா கிலோ 400 ரூபாய் . 24 காரட்டுகளை திருவி போட்டு கிண்டியது 24 காரட் அல்வா, கிலோ 500 ரூபாய் .
வந்தவர்;???
9. வந்தவர்: பூசணி காய் அல்வா ஒரு கிலோ கொடுங்கள்
கடைக்காரர்: இங்கே அல்வா மட்டுமே கிடைக்கும். பூசணி காய் பக்கத்து கடையில் வாங்கிக்கோங்க.
வந்தவர்:???
10. வந்தவர்; இவ்வளவு இனிப்பு வகைகள் தயார் பண்ணுகிறீர்கள் தினமும். இங்கு வேலை செய்பவர்களுக்கு சர்க்கரை வியாதி வராதா?
கடைக்காரர்: சர்க்கரை வியாதி உள்ளவர்களைத்தான் இங்கு வேலைக்கு எடுப்போம்.
வந்தவர்:???
11. வந்தவர்: பாதுஷாவுக்கு ஆப்பர் ( offer )என்று போட்டிருக்கே?
கடைக்காரர்: அஞ்சு கிலோ வாங்கினா ஒரு துண்டு இலவசம்.
வந்தவர்: பத்து கிலோ வாங்கினா?
கடைக்காரர்: உங்க தலையில் போட்டுக்க இன்னொரு துண்டும் இலவசம்.
வந்தவர்: ???
12. வந்தவர்: காராபூந்தி காரா சேவை இரண்டிலுமே காரம் இருக்கிறது. பேர் என்னடான்னா காராத பூந்தி, காராத சேவை...
கடைக்காரர்: உங்கள் பேர் என்ன?
வந்தவர்: வெள்ளைச்சாமி
கடைக்காரர்: ஆனா உங்கள் நிறம் வெள்ளையா?
வந்தவர்:???