கலைந்த காதல்

அன்று
நீ நெருங்கி வர
படபடத்து
வெட்கம் அள்ளி
பூசிய இதயம்...

இன்று
நீ விலகிச் செல்ல
பதைபதைத்து
கண்ணீர் அள்ளி பூசுது...

காதல் கலைய
நோகும் மனம்
தேடும் தினம்
உன் அருகாமை...

உன்னால்
அநாதையான
உணர்வுகள்
கண்களில் வழிந்தோட

காதல் நனைந்த
பேனாவில்
சிந்தின
கவிதை துளிகள்!

எழுதியவர் : சகாய டர்சியூஸ் பீ (22-Mar-22, 2:09 pm)
Tanglish : kalaintha kaadhal
பார்வை : 1886

மேலே