என்னை சேர்ந்த உன் நினைவுகள் சுகம் 555

***என்னை சேர்ந்த உன் நினைவுகள் சுகம் 555 ***அன்பே...


அலைகளின் பேரிரைச்சலை
ரசித்து கொண்டு கடற்கரை பயணம்...

நீ மணல்வீடு
கட்டி விளையாடினாய்...

அலைகளை ரசித்த நான்
மணல்வீட்டை மறந்துவிட்டேன்...

கலைந்தது மணல்வீடு
வசைபாடியது உன் இதழ்கூடு...

உன் கோபத்துக்கு முன்
என் மன்னிப்பு நிராகரிக்க பட்டது...

முடிந்தவரை என்னை
வசைபாடி சென்றாய்...

காலையில் உன்னிடம்
கேட்டதால் என்னவோ...

அன்று முழுவதும்
எல்லோரிடமும் நான் கேட்டேன்...

கடற்கரை மறந்து
பூங்காவில் பிரவேசம் கொண்டேன்...

நாட்கள் கடந்து உன்னை
அங்கும் கண்டேன்...

கடற்கரை கோபத்திற்கு
மன்னிப்பு கேட்டாய்...

நீ கேட்ட அந்த மன்னிப்பே
நாம் தினம் சந்திக்க காரணமானது...

மண்வாசனை போலவே
நமக்குள் காதல் வாசம் வீசியது...

என்னைவந்து சேர்ந்த
நினைவுகள் சுகம்தான்...

நாம் இணைந்திடும் அந்த
நாளில் மழைமேகமும்...

பூ மழையாக பொழியும்
நம் காதலின் சங்கமத்திற்காக.....


***முதல்பூ .பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (24-Mar-22, 5:51 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 480

சிறந்த கவிதைகள்

மேலே