சாருலதா 14

சாருமதியின் இருதயம் வேகமாக அடித்துக் கொண்டது. உடல் முழுவதும் வேர்வையில் நனையத்தொடங்கியது.
"என்ன லதா.....என்ன பேசற ?....இதுவா அதுக்கான நேரம்....? நீ நல்லபடியா கொழந்தைய பெத்துட்டு வா.... அப்புறமா பேசிக்கலாம்."
" அப்புறமா நான் பேசறதுக்கு நேரம் கிடைக்குமான்னு தெரியல....அதனால...."
" லதா....அமைதியா இரு....ரிலாக்ஸ்..."
"இல்ல சாரு...என்ன கொஞ்சம் பேசவிடு....நான் எல்லாம் தெரிஞ்சதனாலதான் பேசறேன். ஆமா உன் போரையும் கண்டிப்பா சாருலதான்னு மாத்தி வச்சுக்கணும். நாங்க லண்டன்ல இருந்தப்ப எதேச்சையா அவரோட டயரியப் படிச்சேன். அதனால நீங்க ஒண்ணா படிச்சது...ஒண்ணா கோல்டு மெடல் வாங்கினது...பெஸ்ட் அவுட்கோயிங் ஸ்டூண்டா வெளியில வந்தது....அவர் ஒன்ன காதலிச்சது....அத ஒங்கிட்ட சொல்ல பயந்து மனசுக்குள்ளாறயே பொதச்சுட்டு ....அவங்க அப்பா அம்மா அண்ணன்களுக்காக உனக்கு ஒரு புல்ஸ்டாப் வெச்சிட்டு....என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டது....எல்லாத்தையும் தெரிஞ்சிகிட்டேன்."
ஒரு கணம் பெரு மூச்சு வாங்கி தொடர்ந்தாள். " என்னை முழுமையாய் விரும்பி ராணி மாதிரி வெச்சிருந்தார். கொழந்தையா கொஞ்சினார். எல்லா சொகத்தையும் வாரி...வாரி....கொடுத்தார். அவருக்கு ஒரு வாரிசை என்னால கொடுக்க முடியலையேன்னுட்டு நான் அழாத நாளில்லை.....வேண்டாத சாமியில்லை....ஒரு நாள் அவரை இன்னொரு கல்யாணம் செஞ்சிக்க கூடாதான்னு கேட்டுட்டேன். எப்படி கோச்சிக்கிட்டார் தெரியுமா? பொறந்தா பொறக்கட்டும். இல்லைனா நான் ஒனக்கு கொழந்த...நீ எனக்கு கொழந்தைன்னு கறாரா சொல்லிட்டார். இனி இந்த மாதிரி ஏதாவது ஒளறின அவ்ளோதான்னு ஒரேயடியா சொல்லிட்டார். ஆனா எனக்குள்ள நான் அங்கேயே தீர்மானிச்சிட்டேன்."
" எப்படியாவது இங்க வந்து ஒன்ன கண்டுபிட்டிச்சி ....உன் கையில அவரை ஒப்படைச்சிடணும்னு. கடவுள் சித்தமா நீ இருந்த இந்த பிளாட்டுக்கே தெரிஞ்சோ தெரியாமலோ நாங்களும் குடி வந்தோம். நீங்க ரெண்டுபேரும் ஒருத்தர ஒருத்தர் பார்த்த பிறகும் கூட ....கட்டுப்பாட்டை மீறாம நடந்துக்கிட்ட பாருங்க.....உங்களுக்கு ஒரு 'ராயல் சல்யூட்'
உண்மையாலுமே நீங்க கண்யமானவங்கதான்.அதுமட்டுமல்ல உங்க காதலும் உண்மையான....ஆத்மார்த்தமான ... காதல்தான். 'MADE FOR EACH OTHER'தான். உன் டயரியையும் படிச்சுட்டுதான் சொல்றேன். நீயும் எனக்காக உன் காதலை மறச்சி....மறந்து ....வாழ்ந்திட துணிஞ்சப்பாரு...அவருடைய நினைவுகளுக்கு ஒரு பெரிய புல்ஸ்டாப்னு வச்சிட்டு அத இதுவரைக்கும் சாதிச்சப் பாரு....உனக்கு நான் என்ன கைமாறு செய்யறதுன்னே தெரியல?. நல்ல வேளைக்கு உனக்கும் கல்யாணம் ஆகல. அவருக்குன்னு முடிபோட்டிருக்கு போல இருக்கு. ஓ....நீங்க ரெண்டுபேரும் சேரனும்.....உங்கள சேர்க்காம நான் விடமாட்டேன்."
"ஒன் பேர சாருமதீங்கிறதிலிருந்து.....சாருலதான்னு மாத்திக்க....இது ஏதொ தியாகம் அது இதுன்னு நெனைக்க வேண்டாம்.ஏன்னா அதுலேயும் என் சுயநலம் இருக்கு. இனி நீயும் நானும் ஒன்னாவே உன் சித்துவ ....சாரி...சாரி... நம்ம சித்துவ பங்கு போட்டுக்கலாம். நீ பாதி....நான் பாதி.... சாரு....லதா.....'சாருலதா'. எனக்கு பொறக்க போற நம்ம குழந்தைக்கு லதான்னு பேர் வச்சி நீங்க ரெண்டுபேரும் வளர்க்கணும்.ஆமாம் அதுலேயும் என் சுயநலம் இருக்கு. உன் குழந்தையா....என் குழந்தையும் ....அதன் ரூபத்தில் நானும் ஒன் மடியில வளரனும்.அவளவுதான்....."
அவள் பேச...பேச....சாருமதியால் ஒன்னும் செய்யமுடியல. வாயடச்சி....திக்ப்ரமை பிடிச்ச மாதிரி.... கற்சிலையாய் நின்றுவிட்டாள். அவள் பேசியதில் காதில் நுழைந்த எதுவும் மனதில் பதியவில்லை.

தொடரும்.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (25-Mar-22, 7:53 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 55

மேலே