நண்டுல்கர்

மும்பையில் தமிழர்கள் வாழும் பகுதியில்
-----------------------------
வாடா நண்டு, நட்டு இங்க எப்படா வந்த?

ஏன்டா நம்ம கிராமத்தில ஏரில வங்குக்குள்ள கையை விட்டு நண்டு பிடிக்கிறதில என்னை யாரும் தோக்கடிச்சதா வரலாறே இல்ல. என்னை எல்லாரும் நண்டு, நண்டுன்னே கூப்புட்டாங்க. எம் பேரு நடராஜன். அந்தப் பேரையும் 'நட்டு'னு கூப்புட்டு அசிங்கப்படுத்தினீங்க.

சரி, நீ எப்படா இங்க வந்த நட்டு.

நான் இங்க வந்து மூணு வருசம் ஆகுது. நம்ம ஊர்ல இருக்கும் போதே எம் பேரை 'நண்டுல்கர்'னு மாத்திட்டேன். நட்சத்திர உண்வு விடுதியில சமையலரா (ஷெஃப்)வேலை பாக்கிறேன். நல்ல சம்பளம். இலவச சாப்பாடு. தங்க குளிர்சாதன அறை. இந்தி, ஆங்கிலம், மராத்தி, குஜராத்தி, உருது எல்லாம் நல்லாப் பேசக் கத்துட்டேன். என்னை உணவகம் வர்ற கோடீஸ்வரங்க எல்லாம் என்னை 'நண்டுல்கர்' னு மரியாதையாக் கூப்படற போது எனக்கு ரொம்பப் பெருமையா இருக்குதடா மாணிக்கம்.

பரவாயில்லைடா நண்டு, மன்னிடுக்கடா நண்டுல்கல் ஷெஃப்பு.

எழுதியவர் : மலர் (24-Mar-22, 4:30 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 62

மேலே