காதலும் போதையும்
கள் உண்டால் வரும்
"போதை"
"போதையில்" வரும்
வார்த்தைகள் எல்லாம்
தெளிவில்லாமல் இருக்கும் ..!!
"போதை" தெளிந்தால்
பேசிய வார்த்தைகள் யாவும்
நினைவில் நிற்காது
நினைத்து பார்த்தாலும்
நினைவுக்கு வராது...!!
ஆனால்..
காதல் "போதையில்" வரும்
வார்த்தைகள் எல்லாம்
மிக தெளிவாக இருக்கும்
அந்த வார்த்தைகள் யாவும்
கவிதையாக வடிவம் கொண்டு
மனதில் நிலைத்து நிற்கும் ...!!
--கோவை சுபா
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
