தேர்தல் அவசரம்
தேர்தல் அவசரம் ...
காயத்ரி வெளியே எட்டிப் பார்த்தாள். மழை சோ.. வென பெய்து கொண்டிருந்தது,கண்களை கடிகாரத்தின் பக்கமாய் செலுத்தினாள், மணி 9.40 காட்டியது கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது அவளுக்கு இன்னும் ஒரு பத்து நிமிஷம் பார்ப்போங்கமழை விடலனாலும் பரவாயில்ல என்னை கொண்டு போய் ஸ்டாப்ங்கில் விட்டுங்க
இல்லனா லேட் ஆகிடும் என்றாள் காயத்ரி...
ம்ம்ம் கொட்டினார் அவள் கணவர் சரவணன்.
சொல்லி விட்டு மீண்டும் மழையை வெறுப்பாக பார்க்க தொடங்கினாள் காயத்ரி..
அம்மா.. அம்மா.. னு சொல்லி டே ஓடி வந்தான் கடைக்குட்டி மாறன் அவனுக்கு ஒரு வயது முடிந்து மூன்று மாதமாகிறது
அவனுக்கு அம்மா தான் உலகம் அம்மா பையுடன் கதவருகில் வெகு நேரமாய் நிற்பது மாறனுக்கு ஏதோ ஒன்றை
புரியச் செய்தது.
அம்மாவை இறுகக் கட்டிக் கொண்டான்,முத்தமிட்டான்,
அம்மா பாய் ( Bye)
மாறா பாய் ( Bye)
என மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டேஎன மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே
கதவுக்கு பக்கத்தில் அம்மாவுடன் செட்டில் ஆகிவிட்டான் மாறன்.
இவன் விடமாட்டான் போலங்க 2 நாள் என்ன விட்டுட்டு எப்படி இருப்பானோ
தெரியல
பாவம் குழந்தை இப்பவே அழ ஆரம்பிச்சுடுவான் போல என்று கூறிக் கொண்டே மணியைப் பார்த்தாள்
பத்ததாக பத்து நிமிடம் இருந்தது.
வெளியே எட்டிப் பார்த்தாள்
மழையும் காற்றுமாய் பரவலாக பெய்து கொண்டிருந்தது..
இனி தாமதித்தால் சரிபட்டு வராது என்று மனதில் நினைத்த படி வீட்டிற்குள் சென்று 2 ரெயின் கோட்டுகளை
எடுத்து வந்தாள் காயத்ரி.
இந்தாங்க இத போட்டுக்கோங்க
என சொல்லிக் கொண்டே அவளும் போட்டுக் கொண்டாள்,
பையை எடுத்தாள்
வரவில்லை கனமாக உணர்ந்தாள். மாறன் தனது 2 கைகளால் பையினை இறுகப் பிடித்துக் கொண்டிருந்தான்.
விடுறா செல்லம் அம்மா போய்ட்டு சீக்கிரமா வந்துடுறேன் என்று சமாதானம் செய்தாள்.
மணி 10 ஆக 5 நிமிடம் காட்டியது
சம்யுக்தா சம்யுக்தா என அழைத்தாள் காயத்ரி , சம்யுக்தா காயத்ரியின் மூத்த மகள் 7 வயது ஆகிவிட்டதால்
அம்மாவின் வேலை பற்றி கொஞ்சம் புரிதல் இருந்தது அவளுக்கு.
என்னம்மா...... என்று கேட்ட சம்யுக்தாவை நோக்கி தம்பிய பார்த்துக்கமா பாட்டிக்கு தொல்லை கொடுக்கக் கூடாது
என்று கூறிவிட்டு,
தன் மாமியாரை நோக்கி கிளம்புவதாக சமிக்கை செய்து விட்டு பையை தூக்கிக் கொண்டு வெளியேறினாள்
மாறனின் அழுகை உச்ச தைத் தொட்டிருந்தது ,அந்நேரம்காயத்ரிக்கு
மனமே இல்லை அவனை விட்டுச் செல்ல
அவனைச் சமாதானம் செய்ய அவளிடம் வார்த்தைகளும் இல்லை
கனத்த இதயத்தோடு வண்டியில் ஏறிக் கொண்டாள்.
தனது இரு சக்கரவண்டியைச் செலுத்தினார் சரவணன்
லேட் ஆகல ல வண்டி எத்தனை மணிக்கு வரும் என கேட்டவாறே வண்டியை
இயக்கினார். காயத்ரியிடமிருந்து பதில் ஏதும் இல்லை
உன்ன தான் கேட்கிறேன்
வண்டி எப்போ..
மாறனின்
நினைவில் இருந்து மீண்டவளாய் 10 மணி என்றாள்.
அப்படியா
மழை பெய்றதால லேட்டா தா வரும் நீ டென்சன் ஆகாத என்றான் சரவணன்.
ம்ம்ம் ... மட்டும் பதிலாய் வந்தது
மீண்டும் மனதை
மாறனின் நினைவு அபகரித்தது.
2 நாள் இரவினை எப்படி கடத்துவது என்பதே ஓடியது.
நல்ல வேளை இன்னும் வண்டி வரவில்லை என மனதிற்குள் நினைத்துக் கொண்டே வண்டியில் இருந்து இறங்கி தன் உடன் பணிபுரிபவர்களை நோக்கி நடந்தாள் காயத்ரி
தேர்தல் பணிக்கு செல்வது அவ்வப்போது பழக்கம் தான் என்றாலும் இந்த முறை மாறனை விட்டு விட்டு செல்வது புதிய அனுபவமாக இருந்தது.
அனைவருக்கும்ம் ஒரே இடத்தில் பணி ஆணை பெற வேண்டியிருந்ததால் சேர்ந்தே செல்வதற்காக ஒரு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இனி வீடு திரும்ப 2 நாட்கள் ஆகிடும் ..இப்போது உடன் வருபவர்கள் யாரும் மீண்டு வரும் போது வர போவதில்லை
வெவ்வேறு இடங்களில் பணி வழங்கப்படும் தனிமைப் பயணம் தான் என மனதிற்குள் ஒரு ஒத்திகையே பார்த்துக் கொண்டிருந்தாள்
காயத்ரி....
வாகனம் அருகினில் வந்து நிற்க அனைவரும்
அதில் ஏறிக்கொள்ள
வாகனம் விரைந்தது
தேர்தல் களம் நோக்கி...