சாருலதா 15

லதாவை ஆப்ரேஷன் தியேட்டருக்குள் கொண்டுபோனார்கள். சாருமதி தியேட்டருக்குள் போகவில்லை. சிலையாய் உட்கார்ந்தவள்....உட்கார்ந்தவள்தான். மௌனம்...மௌனம்தான். பிரசவம் முடிந்து வந்த டாக்டர்....சாருலதாவின் கைகளை பிடித்துக்கொண்டு...' பெண் கொழந்தை பிறந்திருக்கு. ஆனா கொழந்தையை மட்டும்தான் காப்பாத்த முடிஞ்சது...சாரி....சாரி.... வெரி....வெரி...சாரி....'என்றாள்.
ஒரு பொட்டுகூட அழவில்லை சாருமதி. ஏன் சித்தார்த்தனும் மௌனமாய் அந்த அடியை முழுமையாய் ஏற்றுக்கொண்டான். எல்லா காரியங்களையையும் அமைதியாக செய்து முடித்தார்கள். குழந்தைக்கு லதான்னு பேர் வைத்தார்கள். சாருமதியும் 'சாருலதா'ன்னு பேரை மாற்றிக்கொண்டாள். இதோ....அவள் பிளாட்டை காலி செய்துவிட்டு சித்தார்த்தனின் ப்ளட்டுக்கே குடி வந்துவிட்டாள். கல்யாணம் செய்து கொள்ளாமல் ....தாலி காட்டிக்கொள்ளாமல்....ஒன்றாக குடும்பம் நடத்துகிறார்கள்.
" சாரு....உலகம் இதை ஒத்து கொள்ளுமா? என்னை விடு....நான் வாழ்ந்தவன்....வாழ்ந்து இழந்தவன்.நீ அப்படியில்லையே..உனக்குன்னு ஒரு வாழ்க்கை...உனக்குன்னு ஒரு அந்தஸ்து இருக்கில்ல...."
" சித்து....ஒலகத்த பத்தி கவலைப்படாதீங்க.ஏன்னா அது எது வேனா பேசும்....என்ன வேனா பேசும்... கொழந்த இல்லைனா ' மலடி'ன்னு வாய் கூசாம பழி பொட்டு பேசிடும். இந்த மாதிரி சேர்ந்து வாழ்ந்தா... கண்ணு... காது... மூக்கு... வச்சி கதை..கதையா...ராமாயணம்....மஹாபாரதம்னு....எல்லாம் பேசும். நான் உங்கள காதலிச்சதும்....நீங்க என்னை
காதலிச்சதும் இயற்கையா நடந்த ஒன்னு. ஆனா அதை இரண்டு பேருமே ....கோழைகளா வெளிப்படுத்த பயந்து கொண்டு... நம்மளை நாமே ஏமாற்றிக்கொண்டு முக்கியமா இந்த வயசிலும்...இன்னமும் இந்த ஒலகத்த நெனச்சி பயந்துகொண்டு ...நம்
வாழ்க்கையையே தொலைச்சிட்டு நிற்கிறோம்.இப்பவாது நம்மக்கு தைரியம் வரட்டும்,துணிஞ்சி நிப்போம். யாரைப்பாத்து
இனி நாம பயப்படணும்? நானே இதப்பத்தி கவலை படல..."
" லதா...தெய்வமா இருந்து நம்மை சேத்து வெச்சிட்டா....ஆனா அவ மொதல்ல உங்களோடு தாலிகட்டிக்கொண்டு மனைவியா வாழ்ந்ததால....அந்த தாலிக்கும்...அவ ஆசைக்கும்.... அவ தியாகத்துக்கும் மரியாதை கொடுத்து நான் தாலிகட்டிக்கொள்ளாம வாழ சம்மதிச்சு....இதோ வாழ்ந்திட்டு இருக்கேன்.அவ என் பேரை வேணா மாத்தி.... பங்கு போட்டுக்கலாமே தவிர.....வாழ்ந்த வாழ்க்கையை இல்ல...அவ இப்பவும் உங்க மனைவிதான்...இப்பமட்டுமில்ல எப்பவும் உங்க மனைவிதான். அந்த இடத்தை யாராலும் பூர்த்தி செய்ய முடியாது. அவ அந்த தகுதியிலிருந்து இறங்கியதில்லை.நான் இறங்கவிடப்போவதுமில்லை. இனியாவது தைரியமாக ....நாம் காதலர்களாகவே வாழ்க்கையை ஓட்டிடுவோம்."
"இதோ நம்ம கொழந்தை லதா....அதே சிரிப்பு....அதே அழகு.....அதே கள்ளம் கபடமில்லா மனசு.... அதே அலை...அலையா ....கரு..கருன்னு திக்கா தலைமுடி.....இவ ஒருத்தி போதுமே....நம்ம வாழ்க்கையே நெறஞ்சிடுமே...இது போதாதா? ஒலகத்த பத்தி ஏன் கவலைப்படுறீங்க?"
" எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது ஒங்க கூடத்தான்னு வைராக்யமா இருந்தேன். அதனால நான் இழந்தது ஏராளம்....அது வேணாமே...போனது போயிடுச்சு ....போகட்டும். நீங்களும் எனக்கு துரோகம் செய்யல...சொல்ல தயங்கியதால நம் வாழ்க்கை தடம் மாறி....தொலைச்சிட்டு நிக்கறோம்.இனியாவது நாம் தைரியமாக....நம்மைப்போல் வாழ்க்கையைத் தொலைத்தவர்களுக்கு ...அதாவது கோழைகளுக்கு...ஒரு எடுத்துக்காட்டாய்....ஒரு வழிகாட்டியாய்.... வாழ்ந்து காட்டுவோமே. இனியாவது நாம் நாமாவே வாழ்வோமே... உண்மையான காதல் உடல் கவர்ச்சியில் இல்ல...உள்ள கோயில்லதான் இருக்கு.இந்த உடல் அழியக்கூடியது.....ஆனா உண்மை காதல் என்றும் அழிந்ததில்லை....அழிவதுமில்லை....
அழியப்போவதுமில்லை. லதா ரெண்டையுமே சாதிச்சிட்டா. காதலினால் தியாகம்....தியாகத்தினால் காதல்...ஓ....You are simply Great .... Latha ஒனக்கு ஒரு 'Royal சலூட்

தொடரும்

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (26-Mar-22, 6:54 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 55

மேலே