சாருலதா அத்யாயம் 16
"என்ன Friend .....ரெண்டுபேரும் அப்போதிலிருந்தே இப்படித்தான் ஒக்காந்திருக்கீங்களா? மலரும் நினைவுகளா...? 'Golden Memories ம்ம்ம்ம்......' எனக்கும் உங்க கதை எல்லாம் தெரியும். என்னதான் அவங்க பெத்திருந்தாலும்..... கண் முழிச்சத்திலிருந்து நான் பாத்த ஒரே முகம்...ஒன் முகம்தான். அன்னையிலிருந்து இன்னையவரைக்கும் என் மொகம் கோணாம என்னை ஒன் கண்ணுக்குள்ளையே வச்சு காப்பாத்தற....ஒன்ன அம்மான்னு நெனைக்கறதைவிட ஒரு Friend ஆ.... நெனைக்கும்போதுதான் பெருமையாயும்...ஒரு கெத்தாவும் இருக்கும்மா. மனசு முழுக்க சந்தோசம் பொங்கி வழியுது. ஒரு வேளை அவங்க உயிரோட இருந்திருந்து என்னை இப்படி வளர்த்திருந்தா கூட..... அது ஒரு அதிசயமில்ல. ஏன்னா பத்து மாசம் அவங்க வயத்துல சுமந்து பெத்த பிள்ளை....அவங்க சதை...அவங்க ரத்தம்....அது ஒரு பெத்த கடன். இல்ல நீ எனக்கு சித்தியா.... வந்திருந்து வளர்த்திருந்தா கூட...அது கூட அதிசயமில்லை. ஏன்னா அது ஒரு கடமையாயிருந்திருக்கும். கல்யாணமும் பண்ணிக்காம....என்னையும் பெக்காம...இப்படி ராணி மாதிரி வளர்த்திட்டு இருக்கியே...நான் என்ன தவம் செஞ்சேனோ தெரியல. இல்ல என்ன புண்ணியம் செஞ்சேனோ புரியல. ஒன்ன என் அம்மாவா....இல்ல...இல்ல...Friendஆ அடையறதுக்கு. அப்பாவும் சரி...நீயும் சரி...ஒரு உண்மையான காதலுக்கும்....தியாகத்துக்கும் கொடுத்திருக்கிற மரியாதை...ஓ...'HATS OFF TO BOTH OF YOU' அத ஒரு Friendஆல தான் புரிஞ்சிக்க முடியும். உணர முடியும். இந்த உலகம் உள்ளவரை ஒங்க காதல் வாழும். இது சத்தியம். இந்த சின்ன பொண்ணு ஒண்ணே ஒண்ணு சொல்லிக்க ஆசைப்படுறேன். Love பண்ணுங்க வேணான்னு சொல்லல .உங்க காதல்
உண்மையாயிருந்தா .... அதுக்கு ஆளும் ஒர்த்தா இருந்தா தைரியமா வெளிப்படுத்துங்கள்.வாய்ப்பை நழுவ விட்டுடாதீங்க.
அப்புறம் இவங்கள மாதிரி வாழ்க்கையை தொலைச்சிட்டு...வருத்த படவேண்டியிருக்கும். Love பண்றதுக்கு முன்னாடி அதற்குத் தேவையான தகுதி...தைரியத்தை வளத்துக்கோங்க...தெய்வீக காதல்தான்...தைரிய காதலாகவும் இருக்கட்டும்." என்று கூறியபடி சித்தார்த்தனையும்...சாருலதாவையையும் கட்டிக்கொண்டாள் லதா.
சுபம்
முற்றிற்று.
அன்புடன் ஜீவன்