நல்லவர் படும் பாடு

இதயத்தில் அன்பு சுரப்பார் வாழ்வில் கண்ணீர் சுரப்பார்!
கண்ணில் கருணை கொண்டோர் மண்ணில் தோல்வி காண்பார்!
இனிய சொற்களை நவில்வோர், தீஞ்சொல்லுக்கு ஆளாவார்!
மனித பண்பாடு மிகுந்தோர், இவ்வுலகில் படாத பாடு பட உகன்றோர்!
பணத்தை விட்டு குணத்தை தழுவுவோர், வாழ வழியின்றி வெதும்புவோர்!

அன்பில் உருவான அமைதி தான் உண்மையான ஆனந்தம் என வாழ்ந்து காட்ட நினைப்போர், பணம் பதவி கொண்டவர்களால் ஒடுக்கப்பட்டு முடிவில் ஒதுக்கப் படுகிறார்கள்!

எழுதியவர் : ராம சுப்பிரமணியன் (27-Mar-22, 3:43 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 177

மேலே