மாடர்ன் விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்

நேரிசை வெண்பாக்கள்

மாய வினைதீர்க்கும் மாடர்ன் விநாயகன்
ஏய உணர்விக்கும் என்ஐயன் - தூயவழி
காட்டுவான் நீயவனை கண்டிப்பாய் நேயமன
மேட்டிலே வைத்து வணங்கு! 1

மாடர்ன் விநாயகனை நம்மனத்தில் வைத்தபடி
பாடலால் பூசித்துப் பாதத்தை - நாடிட
நன்மையெலாம் தந்தருளும் நாயகனை நம்மனதில்
என்றுமே வைப்போம் இனிது! 2

எழிலான மாடர்ன் விநாயகன் என்றும்
அழியாப் புகழ்தருவான் ஆசி - வழங்கியே;
ஆணவத்தை நீக்கி அழியாப் புகழோடு
நாணயமாய் வாழ்வோம் நயந்து! 3

விநாயகர் பட உதவி - தினமலர்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Mar-22, 10:27 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

புதிய படைப்புகள்

மேலே