காதல் கதைகள்
காதல் கதைகள்..
------------------
கண்டதும் கண்கள்
சேரும்!
கண்களில் காதல்
மோதும்!
காதலில் காமம்
ஊறும்!
காமத்தில் கூடல்
மீறும் !
கூடலில் ஊடல்
சீறும்!
ஊடலும் பிரிவாய்
மாறும் !
பிரிவினில் காதல்
தேறும்!
காதலில் கண்கள்
கூடும் !
இந்தக்
கதைகளே பூமி
ஆளும் !
-யாதுமறியான்.