என் நண்பனே

நண்பா !

எப்போது
அறை மாறினாய்
என் இதய வீட்டில் நீ !

உன் அதே கண்கள்,
பேசும் மொழி வேறாய் !

எப்போதும் பேசும்
வார்த்தைகள் தான்,
இப்போது அர்த்தம் மாறி
ஒலிக்கிறதே!

தோள் மீது கை போட்டுத்
திரியும் போதும்
வராத உணர்வு,
உன் சிறு விரல் தீண்டலில்
தற்போது !

தவிப்புகள்
தலை தூக்க
தவிர்க்கிறேன் உன்னை !
குழப்பங்கள்
பித்தாக்கி, மெதுவாய்
இழக்கிறேன் என்னை !

பழைய உன்னிடம்
மறைக்க என்னிடம்
ஏதும் இருந்ததில்லை !
ஆனால் இப்போது,
பேச வந்து மௌனமாய்,
ஆசைகளை வெட்கமாய்
உதிர்க்கிறேன் !

உன் மொக்கை
ஜோக்கிர்க்கும்
சிரித்தே வைக்கிறேன் !

அர்த்தமில்லா
வார்த்தைகள்
ஆயிரம் பேசினோம் !
மௌனத்திற்கு
அகராதி
எழுதிப் படிக்கிறேன்!

என் கடைசி காட்சி
உன் மடியில் உன் முகம் பார்த்து
தீர வேண்டுமாய்
தோன்றுதடா ! ஏன்?
 
நீ தொலைவே போன
நாட்களில் தான்
இந்த மாற்றம் வந்து
தொலைத்தது !

என் எவனோ ஒருவன் 
உன் உருவில் இங்கே !
என் நண்பன் எங்கே ?

- நா முரளிதரன்

எழுதியவர் : நா முரளிதரன் (5-Apr-22, 8:26 pm)
சேர்த்தது : நா முரளிதரன்
Tanglish : en nanbane
பார்வை : 491

மேலே