காதலும் கடவுளும்
காதலும் கடவுளும்.
-------------
காதல் என்பது
பழசோ பழசா
காதல் மட்டுமே
தினந்தினம் புதுசு!
எனக்கெனப் பிறந்தது
யாரோ எவரோ /
உனக்கெனப் பிறந்தது
நானே தானே!
காதலும் வீரமும்
காவியக் கூற்றா /
காதலில் வீழ்வதே
கண்களின் தீர்ப்பா !
கடவுளின் கதவமும்
காதலின் திறப்பா /
கடமையைக் காட்டிடும்
காதலின் அணைப்பா !
-யாதுமறியான்.