கல் நெஞ்சக்காரியே
கல் நெஞ்சம் கொண்டவனே
என்று என் நண்பர்கள்
என்னை திட்டுவார்கள் ..!!
ஆனா ..
என் அழகுசிலையே
உன்னை கண்டவுடன்
என் கல் நெஞ்சம்
கனிபோலானது...!!
மனம் திறந்து என் காதலை
உன்னிடம் சொன்னப்பிறகும்
நீ பதில் ஏதும் சொல்லாமல்
என்னை தவிக்க வைத்து
வேடிக்கைப் பார்க்கின்றாய்..!!
கல் நெஞ்சமோ உன் மனம்
கல் நெஞ்சக்காரியே
கல்லும் கனியாகும் என்று
இலவு காத்த கிளிபோல்
நான் காத்து நிற்கிறேன் ...!!
--கோவை சுபா