ஐக்கூ

ஆளுவோரைத் தேர்ந்தெடுத்தோர்
அவரிடம் கையேந்தச் செய்வதே
சட்டத்தின் ஆட்சி

பாலின உறுப்புகளால்
பகிரங்கமாய் விளம்பரம் செய்வதே
நவீன தொழில்நுட்பம்

தவறான செயல்களை
தவறில்லாமல் செய்யுவோரே
தற்காலத்தில் பெருந்தலைவராய்

பூமத்திய கோட்டினருகில்
உயிரின் உற்பத்திப் பெருகுவதை
பொய்பித்தது உலகமயமாக்கல்

உயர்ந்த உடலுழைப்பை
உலுத்திட வைத்த இயந்திரத்தால்
பஞ்சமே இனிவுலகில்

இறைவனின் கட்டமைப்பை
ஏளனஞ் செய்திடவே மனிதால்
ஆக்கப்பட்டதே மதங்கள்

ஒலியையும் வலியையும்
போன்ற அற்புத உணர்வே
இறையை அறிதல்

தனக்கு தன்னையே
பொய்யின்றி உணர்த்தும் கலையே
கல்வி பயிலுதல்

உணவை உயிருக்காக
இறைவன் படைத்ததை பணத்தால்
பதுக்கியவன் மனிதன்

பொய்யுரைக்கா தானியத்தையும்
புரட்டுச் செய்யத் தூண்டியதே
மனிதனின் பேராசை.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (8-Apr-22, 6:22 pm)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : aikkoo
பார்வை : 74

மேலே