ஹைக்கூ கவிதை

🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐

*குறுங்கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐

விளைநிலங்கள்

இன்றும் இருக்கிறது

விலை நிலங்களாக

🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴

குடி குடியைக் கெடுக்கும்

ஒரு முடிவெடுத்தான்

அதைப் படிப்பதில்லையென்று

🍷🍷🍷🍷🍷🍷🍷🍷🍷🍷🍷


நடிகனைப் பார்க்கச் சென்ற ரசிகன்

பார்த்துவிட்டு வந்தான்

பார்க்கவராதே பலகையை

👁️‍🗨️👁️‍🗨️👁️‍🗨️👁️‍🗨️👁️‍🗨️👁️‍🗨️👁️‍🗨️👁️‍🗨️👁️‍🗨️👁️‍🗨️👁️‍🗨️

காந்தியைக் கூட

மறந்திருப்போம்

பணத்தில் இல்லையென்றால்

👨‍🦯👨‍🦯👨‍🦯👨‍🦯👨‍🦯👨‍🦯👨‍🦯👨‍🦯👨‍🦯👨‍🦯👨‍🦯

எல்லா அரசியல்வாதிகளும்

மிகவும் நல்லவர்கள்

மேடை ஏறும்போது மட்டும்


*கவிதை ரசிகன்*

🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐

எழுதியவர் : கவிதை ரசிகன் (9-Apr-22, 10:29 pm)
Tanglish : haikkoo kavithai
பார்வை : 46

மேலே