தமிழ் மொழி வாழ்த்துப் பாடல் அகரவரிசையில்

தமிழ் மொழி வாழ்த்துப் பாடல் (அகரவரிசையில்)

அமுதம் தமிழ்மொழி என்றறிவாய்
ஆசையுடன் நீ தினம் பயில்வாய்
இசையுடன் பாடல் பலவுண்டதனில்
ஈடற்ற மொழியாம் தமிழ்மொழியே
உலக மொழிகளில் இதன் உயர்வை
ஊரார் பலரும் மொழிபெயர்த்தே
என்றும் அதன் புகழ் நிலைத்திடவே
ஏற்றம் பெற்றே போற்றிடுவார்
ஐயம் தெளிவுற கற்றிடலாம்
ஒன்பொருள் பலவும் அதிலுண்டு
ஓங்கி உலகெங்கும் உரைத்திடுவாய்
ஔவை போற்றிய இன் தமிழே!!

அன்புடன் ஸ்ரீ.விஜயலஷ்மி
தமிழாசிரியை
கோய்ம்புத்தூர்-22

எழுதியவர் : ஸ்ரீ.விஜயலஷ்மி (10-Apr-22, 4:15 pm)
பார்வை : 23

மேலே