அன்பால் வந்தஉறவு

துணையிடம் சொல்ல முடியாத ரகசியங்களை,
பிள்ளைகளிடம் பகிர முடியாத சுமைகளை,
அதிகாரிகளிடம் அடக்கி வைத்த கோபங்களை,
அதிகார வர்க்கத்தின் அடக்கு முறைகளின் வேதனைகளை,
உறவுகளின் முன்மொழியாத விழுமியங்களை,

என அனைத்தையும் மனம் விட்டு
பேச இடம் தரும்
ஒரே உறவாய் தோழமை ...
அவனிடம் மட்டும்
தான் என்னை மறைக்காமல்
இயல்பாய் இருக்கிறேன்

உறவால் வந்த அன்பை தாண்டி
அவன் அன்பால் வந்தஉறவு ...
அவன் இல்லாது போனால்
வாழ்க்கை வசந்தத்தை இழக்கும்
வாழ்நாட்கள் உயிர்ப்பின்றி
தவிக்கும்
அன்புடன் ஆர்கே ..

எழுதியவர் : kaviraj (11-Apr-22, 8:24 pm)
பார்வை : 737

மேலே