பிறநெறி போக்கிற்பவர் பெருநட்பாளர் – அறநெறிச்சாரம் 94

நேரிசை வெண்பா

நட்டார் எனப்படுவார் நாடுங்கால் வையத்துப்
பட்டாம் பலபிறப்புத் துன்பமென்(று) - ஒட்டி
அறநெறி கைவிடா(து) ஆசாரங் காட்டிப்
பிறநெறி போக்கிற் பவர் 94

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

ஆராயுமிடத்து நட்பினரெனப்படுதற்குரியார் பூமியில் பல பிறவிகளால் துன்பம் அடைந்தோம் என்று சொல்லி துணிந்து அறநெறியினைச் சோரவிடாது, ஒழுக்கத்தினையுணர்த்தி தீநெறியினின்றும் நீக்குபவரே யாவர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Apr-22, 7:41 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

சிறந்த கட்டுரைகள்

மேலே