நன்னெறி காட்டுவோரே நட்பினராவர் – அறநெறிச்சாரம் 93

நேரிசை வெண்பா
(’ய்’ இடையின ஆசு)

இம்மை அடக்கத்தைச் செய்து புகழாக்கி
உம்மை உயர்கதிக் குய்த்தலால் – மெ’ய்’ம்மையே
பட்டாங் கறமுரைக்கும் பண்புடை யாளரே
நட்டா ரெனப்படு வார் 93

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

இப்பிறப்பில் மன மொழி மெய்களால் அடங்குமாறு செய்து புகழினைப் பெருக்கி மறுபிறப்பில் வீடுபேற்றை யடைவித்தலால்,

இயல்பாகவே அத்தகைய உண்மை யறத்தினை உரைக்கும் குணமுடையவர்களே நட்பினர் என்று கூறப்படுதற்கு உரியராவார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Apr-22, 7:34 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

சிறந்த கட்டுரைகள்

மேலே