புத்தாண்டு வாழ்த்துகள்

உயிர் தாங்கும் உன்
உடலை விரும்பு,
நல் உணவைச் சேர்,
பிறக்கும்
நல் ஆரோக்யப் புத்தாண்டு !

கடிகார முள்ளைப் போல
எதற்கும் எவருக்கும்
நிற்காமல் உழைத்திடு,
பிறக்கும்
பல சாதனைப் புத்தாண்டு !

மழை வரும்
துளிர் விடும் என்றே
விதைகள் புதைக்கப்படுகின்றன,
நேர்மறை எண்ணம் வளர்த்திடு,
பிறக்கும்
தன் நம்பிக்கைப் புத்தாண்டு !

சண்டைக்குப் பின்
ஒரு சாரியேனும் சொல்லிடு
பிறக்கும்,
புதுக் காதல் புத்தாண்டு !

கோபம் தாண்டு
பொறாமை தாண்டு
தடைகள் தாண்டு
ஆசைகள் தாண்டு
வெறுப்பைத் தாண்டு
பயத்தைத் தாண்டு
பொய்களைத் தாண்டு
பிறக்கும்
பெரு மகிழ்ச்சிப் புத்"தாண்டு" !

இருள் தாண்டி
வெளிச்சம் பிறக்கும்
ஒவ்வொரு காலையும்
புத்தாண்டே !

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
- நா முரளிதரன்

எழுதியவர் : நா முரளிதரன் (14-Apr-22, 1:06 pm)
சேர்த்தது : நா முரளிதரன்
பார்வை : 5151

மேலே