ஒழுக்கம் கடைப்பிடியாதார் மூவர் – திரிகடுகம் 94

நேரிசை வெண்பா

நண்பில்லார் மாட்டு நசைக்கிழமை செய்வானும்
பெண்பாலைக் காப்பிகழும் பேதையும் - பண்பில்
இழுக்கான சொல்லாடு வானுமிம் மூவர்
ஒழுக்கம் கடைப்பிடியா தார் 94

- திரிகடுகம்

பொருளுரை:

நட்புக்குணம் இல்லாதவரிடத்தும் அன்புரிமையைச் செய்கின்றவனும், மனைவியைக் காப்பதை இகழுகின்ற அறிவில்லாதவனும்; குணமில்லாத வழுவுதலான சொல்லைச் சொல்பவனும் ஆகிய இம்மூவரும் தமக்குரிய ஒழுக்கத்தை உறுதியாகக் கொள்ளாதவராவர்.

கருத்துரை:

நண்பராகத் தகாதாரை நட்புச் செய்கின்றவனும் மனைவியைக் காவாதவனும், இழிமொழி பேசுகின்றவனும் நல்லொழுக்கம் இல்லாதவர்.

நசைக்கிழமையாவது, நண்பர்கட்குச் செய்யவேண்டிய கடமை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Apr-22, 5:41 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 50

சிறந்த கட்டுரைகள்

மேலே