நல்வினை நீக்கும் படை மூன்று - திரிகடுகம் 95

நேரிசை வெண்பா

அறிவழுங்கத் தின்னும் பசிநோயும் மாந்தர்
செறிவழுங்கத் தோன்றும் விழைவும் - செறுநரின்
வெவ்வுரை நோனா வெகுள்வும் இவைமூன்றும்
நல்வினை நீக்கும் படை 95

- திரிகடுகம்

பொருளுரை:

நல்லறிவு கெடும்படி வருத்துகின்ற பசியாகிய நோயும்,

நல்லோர் நெருங்குதல் கெடும்படி உண்டாகும் விருப்பமும்,

பகைவரிடத்துண்டாகும் கொடிய மொழிகளை பொறுக்காத கோபமும் ஆகிய இந்த மூன்றும் நல்ல வினையை நீக்குகின்ற படைக் கருவிகளாம்.

கருத்துரை:

கொடும் பசியாலும், பெருவிருப்பாலும், கொடுமொழி பொறுக்காத கோபத்தாலும் அறமுறை கெடும் என்பது.

வெவ்வுரை: வெம்மை + உரை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Apr-22, 5:52 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 46

சிறந்த கட்டுரைகள்

மேலே