மங்கையே..!!
சாய்ந்த கோபுரங்கள் இடையே
வாடிவாசல் வழியாக கடந்து
செல்லும் கண்கள்..!!
நெடுந்தூரப் பயணத்தில் குழி
என்று தெரியாமல் விழுந்து
தத்தளிக்கிறேன்..!!
அழுத்தம் கொடுத்து எழுந்து
விடுவா (அல்லது)
அனைத்தே இருந்திட வா..!!
உன் மூச்சு காற்றின் வெப்பத்தை
என் செவிகளில் தாங்கிடுவா
சேற்றில் முளைத்த செந்தாமரை
போல் நீ மலர்ந்தே வந்துவிடு வா..!!
இதழ்கள் நான்கும் முத்தமிட்டேன் முன்னேறிச் செல்ல
மூச்சுக் காற்று ஏனோ
முணுமுணுத்தே கிடைக்கிறது..!!
அடங்க மறுக்கும் எண்ணங்களும்
ஆசையில் துடிக்கும் யாக்கைகளும்
மண்ணில்தான் பரவிக்கிடக்கிறது..!!