காதலிக்க கற்றுக் கொடுத்தது

🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮

*கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮

ஆன்லைன் வகுப்புகள்
நன்றாகக்
கற்றுக் கொடுத்தது
காதலிப்பதற்கு....

📌📌📌📌📌📌📌📌📌📌📌

நிலாவைப் பற்றி
படிக்கிறான்
ஏழைச் சிறுவன்
நிலா வெளிச்சத்தில்

📌📌📌📌📌📌📌📌📌📌📌

அன்று
தேர்வு அறைகளில்
கற்றதை
வாந்தி எடுப்பார்கள்....
இன்று
வாந்தி
எடுப்பதற்கு கூட
வயிற்றில்
ஏதும் இல்லை.....!

📌📌📌📌📌📌📌📌📌📌📌

லஞ்ச ஒழிப்பு பணியில்
சேர்ந்தார்
லஞ்சம்
கொடுத்து.....

📌📌📌📌📌📌📌📌📌📌📌

மத ஒழிப்பு போராட்டத்திற்கு
வந்தார்கள்....
அவரவர்
மத உடையில்....!


📌📌📌📌📌📌📌📌📌📌📌

அந்தப்
புடவை எங்கும்
பட்டுப் பூச்சிகளின்
கல்லறைகள்...!


*கவிதை ரசிகன்*

🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮

எழுதியவர் : கவிதை ரசிகன் (21-Apr-22, 10:32 pm)
பார்வை : 57

மேலே