துவையலின் பேதம் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
புளிப்பாம் இலைத்துவையல் போக்கும்பித் தத்தைப்
புளிப்பா லமைதுவையல் பொல்லா - புளிப்பில்
வெறுந்துவைய னன்றதற்கு மிக்கவுறைப் பிட்ட
நறுந்துவையல் நன்றினும் நன்று
- பதார்த்த குண சிந்தாமணி
புளியாரை போன்ற புளிப்புள்ள இலைகளின் துவையல் பித்தம் போக்கும் . புளித்துவையல் இரத்தத்தை முறிக்கும். எனவே புளிசேர்ப்பது நன்றன்று. அதிககாரம் சேர்த்த நல்ல துவையல் பசியை உண்டாக்கும்.

