மோதக விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்

நேரிசை வெண்பாக்கள்
நேரிசை வெண்பா
மோதக நல்விநாய கன்தாள் தொழுதோர்க்கு
வேதனைகள் ஏதுமில்லை; வேழமுகன் - சாதனைகள்
செய்யத் துணைபுரிவான்; எண்ணித் துணிந்தாலே
தெய்வம் துணைவருவான் நம்பு! 1
ஒன்றியே மோதக நல்விநாய கன்தாளை
சென்றே வணங்கினோர்க்கு செல்வாக்கு - நன்றே
உயரும்; கருணை உடையோரே உண்ணீர்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்! 2
விநாயகர் பட உதவி - தினமலர்
புலால் மறுத்தல் அதிகாரத்திலிருந்து திருக்குறள் 258 ன் ஈற்றடி 'உயிரின் தலைப்பிரிந்த ஊன்' பயன்படுத்தப்பட்டுள்ளது.
மெய்யன் நடராஜ் • 31-Jan-2015 10:14 am
மோதக மோகத்தான் தாள்போற்றி செய்திட்ட
பாதக மில்லாக் கவிதன்னை சாதகமாய்க்
கொண்டெழுது வோர்க்கு இலக்கணம் கற்பிக்கும்
வெண்பா படைப்போர் விதைப்பு.