கிடார் விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்

நேரிசை வெண்பாக்கள்

பாயி லமர்ந்துமே பஞ்சணையில் சாய்ந்துதான்
நீயேதான் இன்கிடார் வாசிக்கும் - நேய
வினாயகனே! உன்தாள் பணிகின்றேன் எந்தன்
வினையைத் தணிநீ விரைந்து! 1

கையில் கிடார்தனை ஏந்தி வினாயகனே
ஐயனே ஐந்து கரத்தானே! - நேயமுடன்
நீயெனக்க ருள்புரிவாய்; நானுனை என்றுமே
வாயினிக்க வாழ்த்துவேன் வந்து! 2

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Apr-22, 9:11 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

மேலே