குழம்பின் பேதம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

சொல்லவுறைக் குங்குழம்பால் தோன்றா தனிலமஃ(து)
இல்லையெனில் வாதம் இருக்குங்காண் - தொல்லுலகில்
நீர்த்தகா ரக்குழம்பால் நீடுமுத் தோஷமுன்பின்
பார்த்தோடும் என்றே பகர்

- பதார்த்த குண சிந்தாமணி

உறைப்புள்ள குழம்பால் வாதம் ஏற்படாது; உறைப்பில்லா குழம்பால் வாதமேற்படும்; காரத்தோடு நீர்க்க வைத்த குழம்பு முத்தோடங்களைப் போக்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Apr-22, 6:10 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

மேலே