நடுநின்று உலக நயனிலா மாந்தர் - அறநெறிச்சாரம் 102
நேரிசை வெண்பா
(‘ன்’ ‘ம்’ ‘ந்’ மெல்லின எதுகை)
தன்புண் கழுவி மருந்திடுவர் தாம்பிறிதின்
செம்புண் வறுத்த வறைதின்பர் - அந்தோ!
நடுநின்(று) உலக நயனிலா மாந்தர்
வடுவன்றோ செய்யும் வழக்கு 102
– அறநெறிச்சாரம்
பொருளுரை:
தமக்கொரு புண்வரின் உலகத்தவர் அதனை நன்றாகக் கழுவி மருந்திட்டு ஆற்றுவர்; ஆனால் அவர்கள் மற்றொன்றினுடைய சிவந்த புண்ணாகிய இறைச்சி வறுத்த வறுவலை விரும்பி உண்பர். ஐயகோ! நடுநிலையாக நின்று உலக நீதியை உணராத மனிதர் செய்யும் முறைமை குற்றமேயாகும்!
குறிப்பு: வறை – வறுவல், நயன் – நயம், நீதி: