இல்வாழ்க்கைக் குள்ளே படுத்தானாந் தன்னைத் தவம் – அறநெறிச்சாரம் 101

நேரிசை வெண்பா

கொன்றூன் நுகருங் கொடுமையை யுள்நினைந்(து)
அன்றே ஒழிய விடுவானேல் - என்றும்
இடுக்கண் எனவுண்டோ இல்வாழ்க்கைக் குள்ளே
படுத்தானாந் தன்னைத் தவம் 101

அறநெறிச்சாரம்

பொருளுரை:

உயிர்களைக் கொன்று புலால் உண்ணும் தீச்செயலை மனத்தாலாராய்ந்து அப்பொழுதே புலாலுண்ணலை முற்றிலும் நீக்குவானானால், எக்காலத்தும் அவனைத் துன்பங்கள் அணுகாது; அவன் இல்லறத்தானாக இருந்தே துறவற நெறியினின்று தவஞ் செய்வாரை நிகர்வான்.

குறிப்பு:

புலால் உண்ணாமையொன்றே தவத்தாலாகும் பயன்களை அடைவிக்கும் என்பதாம்.

ஊன் - இறைச்சி:

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Apr-22, 3:12 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

மேலே