இப்போது நான் தேடும் நிஜம்

ஒரு பித்தனாய் அவளைத் தேடி
அவள் பின்னே அலைந்தேன் அவள்
நிழலிலேயே நிலைத்து அவள் நிஜவுறு
எட்டவும் முடியாது இப்படியே காலம் கழிய
இன்று அவளை மீண்டும் பார்த்தேன்
நிறம் போய் முகப்பொலிவு நீங்கி
இலையுதிர்க் கால மரம் போல
பித்தம் தெளிந்தேன் பித்தெல்லாம் நீங்க
சித்தம் தெளிவாய் நிஜம் தேடி
செல்கின்றேன் நான் இப்போது நிழல்
தேடி அலையாது 'பித்தா பிறைசூடி' பாதங்களே
துணை என்று வாழ்ந்திடவே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (26-Apr-22, 1:42 pm)
பார்வை : 89

மேலே