தமிழ் மொழி..!!

ஆராய்ந்து செல்ல செல்ல
அற்புதங்களை நிகழ்த்தி
கொண்டே இருக்கிறது
எனது உயிர் மொழியான
என் தாய்மொழி தமிழே..!!

உன்னிடம் வந்து பிறந்ததற்கு
பெரும் பாக்கியத்தை நான்
பெற்றுள்ளேன் தமிழை
வெறுப்பவர்கள் மத்தியில்..!!

தமிழ்தான் என் மூச்சு என
என் சொற்களையும் வார்த்தையிலும்
தமிழில் உரையாடவும் வாழ்ந்து
கொண்டு இருந்தேன்..!!

உன்னை முழுமையாக இதுவரை
நான் புரிந்து கொண்டது இல்லை
உன்னை உச்சரிக்கும் போது
அவ்வப்போது நடக்கும் போது ஏற்படும்..!!

என் தாய்க்கும் மேலாக தமிழ்
மொழியை இன்னும் எத்தனை
ஜென்மம் எடுத்தாலும்
உன்னுடைய பிறக்க வேண்டும்..!!

பிறந்ததிலிருந்து உன்னை நன்கு
எழுதத் தெரியாத நான்
உன் மீது கொண்ட காதலால்
எவரையும் தூக்கி எறிய
தயங்காதவன் நான்..!!

அகிலம் போற்றும்
என் தாய் தமிழை
யாராலும் அவ்வளவு எளிதில்
அழித்துவிட முடியாது..!!

தமிழ் வாழ்க

எழுதியவர் : (28-Apr-22, 8:22 pm)
பார்வை : 33

மேலே