எதை கொண்டு நிரப்புவது
கடிதம் எழுதச் சொன்னால்
முத்துக்களை நிரப்பி வைக்கிறாய்.,
அதிரடியான ஓவியங்களையும்
அசால்ட் டாக வரைந்து விட்டு
புன்னகைக்கிறாய்.,
கேள்விகளுக்கு பதில்களாய்
மெளங்களை வரிசையில் நிறுத்துகிறாய்.,
சொல்ல வந்தவைகளை,
சொல்லும் முன்பே
முடித்து வைக்கிறாய்.,
குழந்தைகளோடு குழந்தையாய்
துள்ளித் திரிகிறாய்..
அனைத்து வேலைகளிலும்
திறமையை நிரப்பி
ஜெயித்து விடும் உனக்கு
வாழ்க்கையை மட்டும்
எதை கொண்டு நிரப்புவது
என்று புரியவில்லை ..
அன்புடன் ஆர்கே ..