சுக்குநூறாய் உடைத்தாயடி

வில்லாய் உன் புருவம் வளையுதடி
மலரம்பாய் உன் பார்வை பாயுதடி
கூம்பாய் உன் உதடு குவியுதடி - அதில்
வம்பாய் புன்னகையும் விரியுதாடி.

பாலையாய் வாடிடும் வாழ்வினிலே - தென்னம்
பாளையாய் சிரித்திடும் உன்விழிகள். பூஞ்
சோலையாய் மலர்ந்திடும் உன்வதனம். பட்டுச்
சேலையால் மறைந்திடும் உன்பருவம்.

காலையில் பூத்திடும் செந்தாமரையோ - முகம்
மாலையில் தோன்றிடும் குளிர் நிலவோ
தேனினில் மூழ்கிடும் பலாச்சுளையோ - சொல்
ஒவ்வொன்றும் இனித்திடும் வாய்மொழியோ..

காதலில் இளைத்திடும் என் மேனியோ - அதே
காதலில் மின்னிடும் உன் மேனியோ
உள்ளதை உள்ளபடி உரைப்பாயடி - என்
உள்ளத்தை சுக்கு நூறாய் உடைத்தாயடி

காதலில் மட்டும் இத்தனை சோகம்
எங்கிருந்து வந்ததடி? - என்
சாதலில் தானோ இதற்கொரு முடிவு
எட்டியே முடியுமடி....

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (29-Apr-22, 5:46 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 130

மேலே