சதாபலை இலை - நேரிசை வெண்பா

சதாபலை இலை
நேரிசை வெண்பா

கணமாந்த ரூட்சை கணக்கழிச்சல் வாந்தி
குணமாம் பசியுங் குலவும் - வணமயிலே
கூடு நிறைகருப்பக் கோதையர்க்காம் வேதகலு
நாடு சதாபலையி னால்

- பதார்த்த குண சிந்தாமணி

பால்மந்தம் முதலானவற்றால் உண்டாகும் சுரம், கணக்கழிச்சல், கர்ப்பிணிகளின் வலிகள், இவற்றை நீக்கி பசியை உண்டாக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-May-22, 8:42 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

மேலே