காகத்தின் காதல்
காகத்தின் காதல்
###############
கரையும் காகம் -ஒரு
காவியச் சோகம்!
விரையும் வாழ்வில் -நிறை
காணாத் தாகம்!
குயிலோடு கூட்டணியில்
காகத்தின் அழகிற்கே
களங்கம் சொல்வார் ;
குயிலுக்கோ குட்மார்னிங்
குனிந்து சொல்வார் !
கிளி போலப் பேசாது
குயில் போலப் பாடாது
குமையும் காகம் ,
கேளா ஒலியலையில்
கேவும் பாவம் !
யாவும் இதயத்தின்
இடமாறு தோற்றப்பிழை
நீயும் உணர்ந்துவிட்டால்
மடைதிறக்கும்
அன்பின்மழை !
-யாதுமறியான்.