அன்னை தெய்வம் என்பது உண்மை

நம்மைக் கருவாக சுமக்கையில் அவள் அவதியுறும் பல வலிகள் ! பெற்றெடுக்கையில், வலிப்பினும், அவள் முனகாத பல ஒலிகள்!
பெற்ற பின், குழந்தையை பாதுகாக்க எடுக்கும் பல்வேறு நடவடிக்கைகள்!
அதற்காக, உயிராக நேசிக்கும் கணவனையும் இரண்டாம் நிலைக்கு தள்ளும் தியாகச் செயல்கள்!
தத்தி நடப்பது முதல் புத்தி சிறக்கும் வரை,குழந்தையை நோகாமல் பேணி காக்கும் அரிய அன்பு யுக்திகள்!
உயர்ந்து வளர்ந்த பின்னும், குழந்தையிடம் அன்பு, பாசம் குறையாமல் கொண்டாடும் மாசில்லா பண்புகள்!
மகன் மகள் திருமணம் கொண்ட பின், அவர்கள் கண் கலங்காமல் இருக்க தேர்ந்தெடுக்கும் தன்னலமற்ற வழிவகைகள்!
கணவன் துணை கிட்டினாலும், இல்லாமல் போனாலும், எப்பாடு பட்டாவது, பிள்ளைகளை ஆளாக்க அவள் செய்யும் அலாதியான தியாகங்கள்!
ஒரு சாதாரண மனிதனனை உயர்ந்த மனிதனாக உருவாக்க, எத்தனையோ இடையூறுகளை எதிர் கொள்ளும் தெய்வீக தாய்மார்களுக்கென்று தினம் ஒன்று!
எந்நாளும், தம் தாயின் புகழை அன்புக் கவிதையாகப் பாட, ஒருவருக்கு கொடுப்பினை இருப்பின், அவரே அத்தகைய தாய்ப் பசுவின் அன்பான சிறந்த கன்று!

உலகில் உள்ள ஒவ்வொரு தாய்மாருக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள் இன்று!

எழுதியவர் : ராம சுப்பிரமணியன் (8-May-22, 10:40 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 1090

சிறந்த கட்டுரைகள்

மேலே