நிலா

அவள் வாய்மொழி
நான்கேட்டு அறியாத
ஒன்று...

கொவ்வை அதரம்
அசைய காதல்
மொழி பேசி
கேட்டதில்லை...

ஒற்றை வைர
புல்லாக்கு ஒளிரும்
அவள் நாசிகளை
காணும் பாக்கியம்
நான் பெற்றதில்லை...

அவள் கடைவிழி
அசைத்து காதல்
மொழி பேசியதில்லை...

காதணி அசையும்
அவள் செவிகளைக்
காணும் பாக்கியமும்
நான் பெற்றதில்லை...

இடைதொடும் அவள்
கருங்கூந்தல் அசைய
நான் கண்டதில்லை...

மயக்கும் அவள்
கொலு சொலியில்
செவி குளிர்ந்து
மனம் மயங்கும்
ஆனந்தமும் கிட்டியதில்லை...

ஆயினும் பிரம்மன்
படைத்த உயிரோவியம்
அவள், தன்நிகரற்ற
பேரழகி அவள்!!!

எழுதியவர் : கவி பாரதீ (11-May-22, 7:17 am)
சேர்த்தது : கவிபாரதீ
Tanglish : nila
பார்வை : 165

மேலே