சுயம்
மனவாற்றில் எதிர் நீச்சல் போடும் சிறு மீன்!
முகத்தில் வருடும் முடி போல நளினம்!
வெற்று முகமூடியின் அழுத்தம் ஆழ அமிழ
தவழ்ந்து தத்தி நடக்கும் மழலை!
ஆயிரம் இருந்தாலும் சுயம் இன்றேல்
உம் வாழ்க்கை உம்முடையதா!
எந்த சூழலிலும் உயிர்ப்பாய் உணரவைக்கும்
உண்மையின் உறைவிடம்!
சோர்வோ சோம்பலோ அதன் வழி போனால்
இன்பவெள்ளம்!
சுயத்தின் வலிமையை உணர பிரபஞ்சமே எல்லை!
உன் சுயத்தில் புதைந்து இருக்கும் இனிமை
மூவுலகிலும் இல்லை!