சம்பு நாவல் பழம் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
அனில அழலும் அரும்பித்த வெப்புந்
தனியுலவு தாகந் தயங்கும் - தனிவேடன்
அம்புநா ணுங்கண் அணியிழையே கானிலுறுஞ்
சம்புநா வற்கனிக்குந் தான்
- பதார்த்த குண சிந்தாமணி
இப்பழத்தால் வாத உட்டிணம், பித்த உட்டிணம், தோடத்தால் ஏற்பட்ட தாகம் இவை நீங்கும்