பாலைப்பழம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

வாத கரப்பனறும் வல்லசி லேஷ்மமும்போம்
வேதுகி ரந்தியுஞ்சாம் மென்பசியாம் - ஓதுமதன்
கோலைப் பழித்தவிழிக் கோதா யினிமையுள்ள
பாலைப் பழத்தைப் பருகு

- பதார்த்த குண சிந்தாமணி

பாலைப்பழம் கருங்கரப்பான், சிலேட்டுமம், கிரந்தி இவற்றைப் போக்கி மிகுந்த பசியை உண்டாக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-May-22, 3:26 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

மேலே