இறைதமிழும் இன்றைய அகழ்வும்

ஒரு விகற்ப நேரிசை வெண்பா

சிவகலை தொல்லியல் சொல்லுதே தொன்மை
தவத்தால் பிறந்த தமிழும் - புவியை
கவனமாய் ஆண்டதை தோண்டி எடுக்க
எவரும் வியந்திட வே. (1)

நெல்லில் இருந்து எடுத்த வயதையே
எல்லையாய் கொண்டே வகுத்ததில் - எல்லையே
இல்லா நிலையிலே ஞாலம் முழுவதை
நல்லதாய் ஆண்டாள் தமிழ் . (2)

பள்ளமும் மேடுமாய் இன்னலும் தோன்றிட
கள்ளமாய் மன்னரும் எங்கும் - அள்ளையாய்
சள்ளையைத் தந்தனர் இங்கு புகுந்து
வெள்ளைத் தமிழோ கோ (3)

கீழடி மண்ணை அகழையில் பல்வேறு
தாழிகள் சொல்லின ஆதியின் - வாழிடம்
ஆழமாய் நின்று தமிழும் வளமென
ஏழுல கையாண்ட தை (4)

ஆதிச் சநல்லூ ரிலேயே முருகவேல்
ஆதி தமிழன் தொழுதலை - நீதியென
போதித் தபடியே வாழ்ந்ததை சொல்லுதே
வேத தலைவனே வேல் (5)

கொற்கையில் சங்கை அறுத்து தமிழனும்
உற்பத் திசெய்த அணிகலன் - விற்பனைப்
பற்றிய பல்வகை நாட்டினர் நாணயம்
வெற்றியின் இன்பக் களி (6)

கொடுமணல் ஆய்வில் தமிழன் இரும்பை
கடியாய் உருக்கி பலநல் - வடிவில்
படைத்தான் பொருளையும் என்றே உரைக்க
அடுப்பால் பெருமை உணர்
(7)

மிடுக்காய் பரணியில் பாங்காய் அரசை
அடுக்காய் தமிழால் இணைத்து - நடத்தி
கடவுளாய் வாழும் தமிழை தொழுதால்
கிடைக்கா துமரண மே (8)
--- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (13-May-22, 9:40 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 21

மேலே