குழலூதும் கண்ணன்

நேரிசை ஆசிரியபபா

அறிவது அறிவள வதுகுறித் தனர்பார்
கடலள வதுவா மென்றார் உண்மை
அக்கட லுமுரு வாவதுகேள் சிற்றாறு
பலது மாங்காங் கேக்கிளம் பியோரிடம்
வீழ்ந்து சேர ஆமாம் கடலும்
அறிவுமொத்தம் அறிவ தாராம்
எத்தனை துறைபார் அத்தனை அறிவரோ

ஒன்றுமே அறிநதிலன் உலகை ஆளவும்
நினைப்பன் ஆளை பேச்சால் மயக்குவன்
கெடும் அவனால் ஊரும் நாடும்
மக்கள் மந்தை யாடு மாடென
குழலது தொடர்ந்து போகவும்
மயங்கும் மக்கள் மயக்கியான் பின்னே
......

எழுதியவர் : பழனி ராஜன் (13-May-22, 9:42 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 31

மேலே